டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும், எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாவுமணி அடித்துள்ளது. தீர்ப்பு காரணமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து […]
