விழுப்புரம்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மாசி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாளை அங்காள பரமேஸ்வரி அம்மனின் தேர் வீதி உலா நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 4 ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.