ஷாருக்கான் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 6 பிரபலங்கள் யார்?

ஷாரூக்கான் அண்மையில் பதான் திரைப்படம் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆயிரமாயிரம் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் வந்தபோதும், அவற்றையெல்லாம் முறியடித்து பதான் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை பல்வேறு இந்து அமைப்புகள் புறக்கணிக்குமாறு பிரச்சாரங்களை மேற்கொண்டன. ஆனால் அவையெல்லாம் எடுபடவில்லை.

புறகணிப்பு பிரச்சாரம் பதான் படத்துக்கு மிகப்பெரிய புரோமோஷனாக அமைந்தது. அதுவே அந்த படம் இந்தியா முழுவதும் பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டி, இப்போது இந்திய பாக்ஸ் ஆஃபீஸில் ஆயிரம் கோடி வசூலை வாரிக் குவித்து கம்பீரமாக முதல் இடத்திலும் இருக்கிறது. ஷாருக்கான் என்ற நடிகர் மீது ரசிகர்கள் காட்டிய அன்பின் வெளிப்பாடு இது. ஷாருக்கானே, பதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிரம் மற்றும் டிவிட்டரில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauri Khan (@gaurikhan)

பதான் வெற்றிக்கு முன்பும் பின்பும் சில நாட்கள் சமூக ஊடகங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்டிவாக இருந்தார். ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு முகம் சுழிக்காமல் வேடிக்கையான பதில்களையும் கொடுத்தார். இந்த உரையாடல்களின்போது ஷாரூக்கானின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இப்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 36 மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர்.

ஆனால், ஷாருக்கான் 6 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். அந்த 6 அதி முக்கியத்துவம் வாய்ந்த, ஷாருக்கான் பின் தொடரும் பிரபலங்கள் யார் என்று பார்த்தால் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருபவர் ஷாருக்கானின் மனைவி கவுரிகான். அவரைத் தொடர்ந்து ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா கான் ஆகியோரை பின் தொடர்கிறார். இவர்களை தொடர்ந்து மனைவியின் சகோதரி மகளான ஆலியா சிபா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தாத்லானி, நெருங்கிய நண்பர் காஜால் ஆனந்த் ஆகியோரும் அடங்குவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.