திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (மார்ச்) சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது. மே மாதம் ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் நாளை மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in/#/login அல்லது ttdevasthanam என்ற மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3.37 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 62,101 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,896 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.3.37 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று 8 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.