சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில், மெக்கா – மதினாவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற, கர்நாடகாவைச் சேர்ந்த ஆறு பேர் பலியாகினர்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, கலபுரகி, ராய்ச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர், சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா – மதினாவுக்கு, ஹஜ் புனித யாத்திரை சென்றிருந்தனர்.
மெக்காவில் தொழுகை நடத்திய இவர்கள், நேற்று முன்தினம் ஒரு பஸ்சில் மதினா நோக்கி சென்றனர்.
அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் நின்ற கன்டெய்னரின் பின்பக்கத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.
பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி, ராய்ச்சூரைச் சேர்ந்த, சபி சுல்லத், 53, இவரது மனைவி சிராஜ் பேகம், 48, இவர்களது மகள் ஷிபா, 20, சபியின் தாய் பேபி ஜான், 74, கலபுரகியைச் சேர்ந்த முகமது சைனுதீன், 72, உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, கலபுரகி ஹஜ் கமிட்டி தலைவர் மஜர் உசேன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இறந்தவர்களின் உடல்கள் அங்கேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.- நமது நிருபர் —
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement