போர் முனையில் பிரித்தானியா… பாதுகாப்பு அமைச்சரின் சில்லிட வைக்கும் எச்சரிக்கை


பிரித்தானியா இன்னும் 7 ஆண்டுகளில் போர் முனையை எதிர்கொள்ளும் எனவும் அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் மிகவும் ஆபத்தானதாக

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், உலகம் நிச்சயமாக மிகவும் ஆபத்தானதாகவும், அதிக நிலையற்றதாகவும் பாதுகாப்பற்றதாகவும் உருமாற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளார் பென் வாலஸ்.

போர் முனையில் பிரித்தானியா... பாதுகாப்பு அமைச்சரின் சில்லிட வைக்கும் எச்சரிக்கை | Britain War Defence Secretary Ben Wallace Warns

@Shutterstock

மட்டுமின்றி, மார்ச் 15 அன்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக பாதுகாப்புச் செலவுகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் மீது அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் ஆபத்தை அரசாங்கம் உணர்ந்து அதற்கேற்றபடி தயார் செய்ய வேண்டும்.
இந்த பத்தாண்டுகளில் போர் என்பது உறுதியாகிவிட்டது, அது பனிப்போரா அல்லது நேரிடையான போரா என்பது உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

ஆனால் அதற்கு முன்னர் முழுமையாக தயாராக வேண்டும் என்பதுடன், நமது நண்பர்களையும் நட்பு நாடுகளையும் நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

போர் முனையில் பிரித்தானியா... பாதுகாப்பு அமைச்சரின் சில்லிட வைக்கும் எச்சரிக்கை | Britain War Defence Secretary Ben Wallace Warns

@getty

ரஷ்யா- உக்ரைன் போர் நீடிக்கும்

உலகம் மிக ஆபத்தானதாக மாறிவரும் சூழலில் நாம் பாதுகாப்புக்காக அதிக அளவு செலவழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பென் வாலஸ்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போரானது, அடுத்த ஆண்டும் இதேப்போன்று தொடரும் என்றார்.
மேலும், உக்ரைன் மக்களின் உயிர்களை மட்டுமல்ல, அதன் சொந்த வீரர்களையும் ரஷ்யா முழுவதுமாக அலட்சியப்படுத்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் பென் வாலஸ்.

போர் முனையில் பிரித்தானியா... பாதுகாப்பு அமைச்சரின் சில்லிட வைக்கும் எச்சரிக்கை | Britain War Defence Secretary Ben Wallace Warns

@getty



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.