இளம் வயதில் பெருந்தொகை லொட்டரி பரிசாக அள்ளிய பிரித்தானிய பெண்: தற்போது அவர் எடுத்த முடிவு


இளம் வயதில் தேசிய லொட்டரி ஒன்றில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பிரித்தானிய பெண் ஒருவர் தற்போது நர்ஸ் படிப்பிற்காக பல்கலைக்கழகம் செல்லவிருக்கிறார்.

லொட்டரியில் சுமார் 2 மில்லியன் பவுண்டுகள்

தற்போது 34 வயதாகும் Callie Rogers என்பவர் கடந்த 2003ல் தமக்கு 16 வயதிருக்கும் போது லொட்டரியில் சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை பரிசாக வென்றார்.

இளம் வயதில் பெருந்தொகை லொட்டரி பரிசாக அள்ளிய பிரித்தானிய பெண்: தற்போது அவர் எடுத்த முடிவு | Youngest Lottery Winner Tragic Story

Image: Andy Commins

அந்த மொத்த தொகையையும் போதை மருந்து, அழகுக்கான அறுவை சிகிச்சை, விருந்து, உடைகள், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரிசுகள் என வீணடித்துள்ளார்.
ஆனால் தற்போது இழந்த தமது வாழ்க்கையை திரும்பப்பெற முடிவு செய்துள்ள அவர், மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிப்பில் இணைந்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நர்சிங் படிப்பை தொடங்க உள்ளார். மணிக்கு 3.60 பவுண்டுகள் ஊதியத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில் லொட்டரியில் சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை Callie Rogers வென்றிருந்தார்.

மட்டுமின்றி, அப்போது அவர் கும்ப்ரியாவில் வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வந்தார். தற்போது நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான Callie Rogers கடந்த 2021ல் அதிக போதை மருந்தால் தூண்டப்படு, வாகன விபத்தில் சிக்க, 22 மாதங்கள் வாகனம் செலுத்த தடையும் பெற்றார்.

வாழ்க்கையில் கடும் நெருக்கடி

மட்டுமின்றி, 2018ல் தெருவில் இரண்டு பெண்களால் சரமாரியாக தாக்கப்பட்டு விலா எலும்புகள் நொறுங்கி, பற்கள் உடைபட்டு, நிரந்தரமான பார்வை குறைபாடும் பெற்று உயிர் தப்பினார்.

இளம் வயதில் பெருந்தொகை லொட்டரி பரிசாக அள்ளிய பிரித்தானிய பெண்: தற்போது அவர் எடுத்த முடிவு | Youngest Lottery Winner Tragic Story

@Shutterstock

கடும் நெருக்கடிகளை வாழ்க்கையில் எதிர்கொண்ட Callie Rogers, இறுதியில் லொட்டரி நிறுவனங்கள் வயது வரம்பை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

16 வயதில் உங்கள் கைக்கு பெருந்தொகை பரிசாக வருகிறது. அந்த வயதில் நீங்கள் சிறந்த ஆலோசனைகளைப் பெற வாய்ப்புகள் அமையலாம் ஆனால் நீங்கள் கேட்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை என்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.