நஜ்முல் ஹோடா ஐபிஎஸ்: சேலம் சிட்டி கமிஷனர் டூ ஆவடி ட்ராபிக்… தூக்கி அடிப்பட்டது ஏன்?

தமிழ்நாடு அரசு நேற்று (பிப்ரவரி 23) வெளியிட்டுள்ள அரசாணையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த நஜ்முல் ஹோடா, ஆவடி போக்குவரத்து துறை ஆணையராக மாற்றப்பட்டார். கடந்த 15ஆம் தேதி சேலத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

சேலத்தில் முதல்வர் ஆய்வுஅப்போது ”கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பான கூட்டத்தில் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். அடுத்த சில நாட்களில் சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்அதுவும் பரபரப்பாக இயங்கக் கூடிய மாநகர காவல் ஆணையர் பதவியில் இருந்து போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நஜ்முல் ஹோடா, சேலம் மாநகரின் காவல் ஆணையராக கடந்த 2021 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து சேலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விஷயங்களை முன்னெடுத்தார். அதில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தியது குறிப்பிடத்தக்கது.
​​
சேலத்தில் அதிரடிஇதன்மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியவர். மேலும் மசாஜ் அழகி கொலை, வடமாநில இளைஞர் கடத்தல், தாதகாபட்டி ரவுடிகள் அட்ராசிட்டி, கடன் வாங்கி தருவதாக மோசடி உள்ளிட்ட விவகாரங்களில் விரைவாக நடவடிக்கை எடுத்தவர். குறிப்பாக சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை கண்காணிக்கவும் மாலை 5 மணி முதல் இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணிகளை முடுக்கி விட்டவர்.
அதிவிரைவு படை தொடக்கம்சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு என பிரித்து தனித்தனி குழுக்கள் அமைத்து குற்றச் செயல்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்தார். குட்கா, கஞ்சா, லாட்டரி உள்ளிட்ட குற்றச் செயல்களை ஒடுக்க தீவிரம் காட்டினார். இதுதவிர அதிவிரைவு படை என்ற போலீஸ் படையை புதிதாக அறிமுகம் செய்து வைத்தார். போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் என்றால் இவர்கள் விரைந்து சென்று விடுவர்.
குண்டர் தடுப்பு நடவடிக்கைஇவர்கள் வசம் வாகனம், உடைகள், துப்பாக்கி, ஒலிபெருக்கி, கையெறி குண்டுகள், முதலுதவி பெட்டி, முகக்கவசம், தீயணைப்பான், டிரைபாய்டு, கேமரா, ட்ரோன் உள்ளிட்டவை இருக்கும். 2022ஆம் ஆண்டில் மட்டும் சேலம் மாநகரில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் 174 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி பதக்கம்அவ்வப்போது பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் ராகிங் குறித்து கேட்டறிவது, வியாபாரிகளிடம் ரவுடிகளின் மாமூல் பிரச்சினை குறித்து கேட்டறிவது என நேரடியாகவும் களப் பணியாற்றியுள்ளார். இவர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி பதக்கம் பெற்றவர். முன்னதாக சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.

பின்னணி காரணம்பின்னர் தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பணியில் இருந்துள்ளார். இவ்வாறு தனது ஒவ்வொரு பணி காலத்திலும் நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்ற நஜ்முல் ஹோடா ஐபிஎஸ் திடீர் பணியிடமாற்ற பின்னணியில் அரசியல் ரீதியாக சில அழுத்தங்கள் இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.