பாதுகாப்பு துறையிலுள்ள வேலைவாய்ப்புக்கான வெப்பினார் – ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’

சென்னை: தேசத்தின் பாதுகாப்புத் துறை யிலுள்ள வேலைவாய்ப்புகளை, 10, 11, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் அறியச் செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன. இந்த நிகழ்வின் 13, 14-ம் பகுதிகள் வரும் பிப். 25, 26-ம்தேதிகளில் நடைபெறவுள்ளன.

பிப். 25 (நாளை) மாலை 4 மணிக்கு நடைபெறும் வெப்பினாரில், புதுடில்லியிலுள்ள டிஆர்டிஓசெப்டாம் சேர்மன் ஆர்.அப்பாவுராஜ், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு நிறுவனத்திலுள்ள (DRDO) வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும்,

பிப்.26-ம் தேதி (ஞாயிறு)மாலை 4 மணிக்கு நடைபெறும் வெப்பினாரில், இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் வி.ராஜகோபால், ‘எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள வேலை வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர். இந்தஇரு வெப்பினார் நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத் தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடவுள்ளார்.

இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP07 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.