Mayilsamy, Ajith: எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உங்களை பிடிக்கும் … அஜித்தை உருக வைத்த மயில்சாமி!

நடிகர் அஜித் குறித்து மயில்சாமி உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் மயில்சாமிபிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கியுள்ளது. தீவிர சிவபக்தரான மயில்சாமி கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோவிலில் விடிய விடிய சிவ வழிபாடு நடத்தி விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்ததுமே நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
​ Rajinikanth, Kantara 2: காந்தாரா 2வில் ரஜினிகாந்த்? ரிஷப் ஷெட்டியின் பதில் இதுதான்!​
மயில்சாமி மரணம்ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயில்சாமியின் உயிர் பிரிந்தது. தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பாலும் இல்லாதவர்களுக்கே உதவி செய்து வந்துள்ளார் மயில்சாமி. இதனால் அவரது இறுதிச்சடங்கில் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். 2 நாட்கள் மயில்சாமியின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 2 நாட்களுமே அவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் அலை மோதியது.
​ விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடும் நயன்தாரா?​
அஜித் பற்றி பேசிய மயில்சாமிமயில்சாமியின் இறுதி ஊர்வலத்திலும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் மயில்சாமியின் மரணத்தால் கதறி அழுதனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி குறித்து மற்ற சினிமா நட்சத்திரங்கள் பேசியதும், மற்ற சினிமா நட்சத்திரங்கள் குறித்து மயில்சாமி பேசிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் மயில்சாமி, நடிகர் அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
​ Mayilsamy, Napolean: இது உலகத்துக்கே அடுக்காது.. பயம் பற்றிக்கொள்கிறது.. மயில்சாமி மரணத்தால் கலங்கிப் போன நெப்போலியன்!​
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பிடிக்கும்எம்ஜிஆரின் தீவிர பக்தரான மயில்சாமி, நடிகர் அஜித்துடன் வேதாளம், வீரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் படப்பிடிப்பில் பங்கேற்ற போது, எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவருக்கும் அஜித்தை பிடிக்கும் என்றாராம். ஆனால் அஜித் தான் இதை நம்ப மாட்டேன் என்றாராம். அதற்கு மயில்சாமி, வெளியில் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது, வெளியில் இருந்து பார்க்கும் எனக்கு தான் தெரியும் என்றாராம். அடுத்த சில நாட்களிலேயே மறைந்த பத்திரிகையாளரான சோவும் அஜித்தை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு இதையே கூறினாராம்.
​ Mayilsamy, Mano Bala: ‘எனக்கு அந்த தைரியம் இல்ல… சொன்னதை மயில்சாமி கேட்கல’… நொறுங்கிப்போன மனோ பாலா!​
விளம்பரப்படுத்தியது இல்லைமேலும் சில ரசிகர்கள், ஒரு பக்கம் அஜித் போட்டோவையும் ஒரு பக்கம் எம்ஜிஆர் போட்டோவையும் வைத்து போஸ்டர் வெளியிட்டிருந்தார்களாம். இதை பார்த்த மயில்சாமி, நாம் சொன்னது அப்படியே நடக்கிறது என அவ்வளவு சந்தோஷப்பட்டாராம். மேலும் பேசியுள்ள மயில்சாமி, அஜித் எத்தனை பேருக்கு உதவிகளை செய்து வருகிறார். ஆனால் அவர் அதை வெளிக்காட்டியதே இல்லை. அதை வைத்து எந்த விளம்பரமும் தேடியதில்லை என அஜித் குறித்து உயர்வாகவும் உருக்கமாகவும் பேசியுள்ளார் மயில்சாமி.
​ Bayilvan Ranganathan, Goundamani: ‘நீ மட்டும் அந்த நடிகையை தூக்கி’.. கவுண்டமணியின் அந்தரங்கங்களை பச்சையாக கூறிய பயில்வான்!​
Ajith-Sad

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.