சிபெட்கோ ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்


இலங்கை பெட்ரோலிய சட்டக்கூட்டுத்தாபனத்தின் மேலதிக நேர கொடுப்பனவை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின் பொறியியலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லையெனவும் எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சிபெட்கோ ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Information Released By The Minister Of Energy

மின்கட்டண உயர்வு

பொறியாளர்கள் சங்கம் போனஸ் கேட்கின்றனர். மேலதிக நேர கொடுப்பனவுகளை கேட்கின்றனர். அது கிடைக்காத போது வீதியில் இறங்கி போராடுவதாக கூறுகின்றனர். மின் கட்டணத்தை உயர்த்தியது போனஸ் அல்லது சலுகைகள் வழங்குவதற்கு அல்ல எனவும் பதிலளித்துள்ளார்.

மின்கட்டண உயர்வுக்குப் பிறகு கடன் வாங்க முடிந்ததாகவும், அதன் மூலம் இரண்டு முக்கிய வங்கிகளில் பணம் பெற்று எரிபொருள் வாங்கி மின்சாரம் வழங்குதல் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.