அரக்கோணம் : மகளிர் கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருத்தணி அருகே மகளிர் கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், 25க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.
அரக்கோணம் சாலை ஜே.ஜே. நகர் பகுதியில் கல்லூரி மாணவியை ஏற்றிக்கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் கலோரி பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, தனியார் பேருந்தில் பயணம் செய்த 5க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மெட்டுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனரை கைது செய்த போலீசார்,அவரின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சில அண்மைய செய்திகள் :
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த குன்னவாக்கம் பகுதியில், தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், தொழிலாளர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சென்னை : குமணன்சாவடி பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த இரும்பு தடுப்புகளால், சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக பொதுமக்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.