ராமராஜனின் சாமானியன் படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் சாமானியன். இந்த படத்தில் அவருடன் ராதாரவி, எம் .எஸ் .பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ராகேஷ் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஆர்ட் அடிக்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வியன் ஆர்மான் என்பவர், சாமானியன் என்ற தலைப்பை 2012ம் ஆண்டிலிருந்து இப்போது வரை புதுப்பித்து வருகிறேன். அதனால் அதே பெயரில் சாமானியன் என்கிற தலைப்பில் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாமானியன் படத்தை தயாரிக்கும் எக்ஸட்ரா நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தாங்களும் சாமானியன் என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும், அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடி ஆகும் என்பதால், இந்த தலைப்பை பயன்படுத்துவதில் தவறில்லை என்று வாதிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தை தயாரிக்க 5 கோடி ரூபாயும், விளம்பரம் செய்வதற்காக ஒரு கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதனால் இந்த படத்தின் தலைப்பிற்கு வேறு எவரும் காப்புரிமை கேட்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென நீதிபதி இடத்தில் வாதிட்டுள்ளார். அதை ஏற்று நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.