வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனா ஆதரவு அளிக்க எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஒராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு சாதுர்யமாக எதிர்கொண்டு வருகிறது.
இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்னர். போர் துவங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யா- உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பை டன் கூறுகையில், உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனா ஆதரவு அளிக்க எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார். இதற்கிடையே சீன அதிபரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மறுப்பு:
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று ஐ.நா.வில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஓட்டளிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement