சென்னை: குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக, தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள , சில மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்களில் குளறுபடி இருந்ததால் சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை. பதிவு எண்கள் சரிசெய்யப்பட்ட பிறகு தேர்வு தொடங்கியது. இதனால் தாமதமானது. […]
