தமிழ் சினிமாவில் இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் கங்கை அமரன். தற்போது அரசியலில் தீவிரமாக உள்ள கங்கை அமரன் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். கங்கை அமரனின் இரண்டு மகன்களான வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் தமிழ் சினிமாவில் பிரபலங்களாக உள்ளனர்.
மூத்த மகனான வெங்கட் பிரபு பிரபல இயக்குநராக உள்ளார். இளையமகனான பிரேம்ஜி நடிகராவும் இசையமைப்பாளராகவும் உள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம், சத்யம், சரோஜா, மங்காத்தா, கோவா, ஒன்பதில் குரு, சேட்டை, பிரியாணி, மாஸ், யட்சன், சென்னை 28 -2, ஜோம்பி,மாநாடு, பிரின்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரேம்ஜி, தனது அண்ணன் இயக்கும் படங்களில் கேரண்டியாக ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து விடுவார்.
Mayilsamy: மயில்சாமி வீட்டு மீன் குழம்புக்கு ரசிகர்களான ரஜினியும் கமலும்…
43 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தன்னை முரட்டு சிங்கிள் என கூறி சமூக வலைதளங்களில் மார்தட்டிக் கொள்வார் பிரேம்ஜி. பிரேம்ஜிக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என குடும்பத்தினர் தீவிரமாக பெண் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகியை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.
பாடகி வினைட்டாவும் பிரேம்ஜியும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் வினைட்டா மறுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேம்ஜியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்த வினைட்டா, மீண்டும் என் புருஷனோடு சேர்ந்துவிட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில் பிரேம்ஜி அமரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Devayani: தேவயானிக்கு அவ்வளவு டார்ச்சர் கொடுத்தார்… பிரபல இயக்குநரை கிழித்து தொங்கவிட்ட விஜயலட்சுமி!
இதனை முன்னிட்டு பிரேம்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் வினைட்டா. பிரேம்ஜியுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை எல்லாம் ஷேர் செய்துள்ள வினைட்டா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி.. நீங்கள் எப்போதும் போல நிறைய மகிழ்ச்சி மற்றும் பாஸிட்டிவிட்டியுடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.
View this post on Instagram A post shared by Vinaita Sivakumar (@vinaita)