தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந்தேதி குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்வுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
இதில், கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேர்வர்களுக்கு கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான கேள்வித்தாள்கள் வழங்கிய போது தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள். இதனால் தேர்வு சற்று காலதாமதமாக தொடங்கபட்டது.
இந்த தேர்வெண் முரண் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, காலதாமதமாக தொடங்கப்பட்ட தேர்வு மையத்தில் எழுதும் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படும்.
தேர்வர்களின் பதிவெண்களில் ஏற்பட்ட மாற்றம் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பிற்பகல் நடைபெற உள்ள தேர்வின் நேரம் 2.30-5.30 என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.