எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுமார் 40 ஆயிரம் கைதிகளை அடைக்கக் கூடிய வகையில் மிகப்பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது.
அந்த சிறைச்சாலைக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் கைதிகள், மற்ற சிறைகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். எல் சால்வடாரில் குற்ற வழக்குகளில் சுமார் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.