பெரம்பலூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் பெரியம்பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(33), பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் செல்வகுமாரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அறிவுறுத்தலின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர் செல்வகுமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.