சென்னை: கொலை வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி செயலி மூலம் பிடித்து போலீஸ் கைது செய்தது. சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை மடக்கி சோதனையிட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேக நபரின் முகத்தை எப்.ஆர்.எஸ். ஆப் மூலம் படம் எடுத்தபோது கார்த்திக் என்பது தெரிய வந்தது.
