தைவான் நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வாங் குவோ-ட்சாய் (Minister of Transportation and Communications Wang Kwo-tsai) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, தைவான் நாட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளில் 5,00,000 பேருக்கு இந்திய மதிப்பில் தலா 13,512 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
கூடுதலாக, பயண முகவர்கள் தைவானுக்கு அழைத்து வரும் ஒவ்வொரு சுற்றுலா குழுவிற்கும் இந்திய மதிப்பில் ரூபாய் 27,025 முதல் 54,051 ரூபாய் வரை மானியங்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வரும் நாட்களில் தைவானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ள தைவான் அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் இலக்கை இரட்டிப்பாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது