தேர்வே இப்படின்னா ரிசல்ட்டு சிரிப்பா சிரிச்சிரும்.. நொந்து போன தேர்வர்கள்..! டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் பதிவெண் மாற்றம், வினாத்தாள் குளறுபடி போன்றவற்றை காரணம் காட்டி காலதாமதமாக நடத்தப்பட்ட தேர்வுக்கு பின்னால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்வெழுதியவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். எந்த ஒரு கண்காணிப்பும் இல்லாமல் மதுரையில் செல்போன் மற்றும் புத்தகங்களை வைத்து தேர்வர்கள் காப்பி அடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் உள்ளே அனுமதில்லை… தலையில் மாட்டி இருக்குற ரப்பர் பேண்டு முதல் … காதில் கிடக்குற கம்மல் வரைக்கு கழட்ட சொல்றாங்க.. ஒரு தேர்வுக்கு இவ்வளவு கடுமையான கெடுபிடி நடவடிக்கை தேவை தானா ? என்று நீட் தேர்வின் போது அங்கலாய்த்த பலருக்கு சனிக்கிழமை தமிழகத்தில் நடத்தப்பட்ட TNPSC குருப் 2 தேர்வு பல்வேறு விசித்திர அனுபவங்களை கொடுத்துள்ளது.

அதிகபட்சமாக ஒன்றே முக்கால் மணி நேரம் வரை தாமதமாக தொடங்கிய மாநில அரசு பணிக்கான தேர்வு… தேர்வர்களுக்கு பதிவெண்படி வினாத்தாளை கொடுக்காமல் குழப்பி அடித்த கண்காணிப்பாளர்கள்…. கண்காணிப்பாளர் குழம்பி போய் இருந்ததால் செல்போன், புத்தகம் பார்த்து எழுதிய தேர்வர்கள்… என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடக்கின்ற தேர்வு என்பதால் பலத்த எதிர்பார்ப்போடு தேர்வெழுத வந்தவர்களுக்கு முதலில் வினாத்தால் பதிவெண் அடிப்படையில் கொடுக்காமல் மாற்றி கொடுக்கப்பட்டதால் உருவானது குழப்பம். பதிவெண் மாற்றிக் கொடுக்கப்பட்டதை தாமதமாக கண்டுபிடித்து வினாக்களுக்கு பதில் அளிக்கப்பட்ட வின்னாத்தாளை பெற்று அதனை உரிய தேர்வர்களிடம் கொடுக்க ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதமானது

மதுரை, சிதம்பரம், சென்னையில் பச்சையப்பன் கல்லூரி ராணி மேரி கல்லூரி, அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி, துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் விடைத்தாள்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வழங்கப்பட்டது.

காலணா காசாக இருந்தாலும் கவர்மெண்ட் சம்பளமாக இருக்கனும் என்ற இலக்கோடு வருடக்கணக்கில் காத்திருந்த தேர்வர்கள் பலர் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.

பதிவெண் குழப்பத்தால் கண்காணிப்பாளர்கள் தவித்துக் கொண்டிருந்ததை சாதகமாக்கிக் கொண்டு சிலர் செல்போன் மூலம் விடை தேடி எழுதியதாக பெண் தேர்வர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

வினாத்தாளில் ஒரு அடித்தல் இருந்தாலே பக்கத்துக்கு 2 மதிப்பெண் குறைக்கப்படும் என்ற விதி இருக்க ஏற்கனவே எழுதி வைத்த வினாத்தாளில், உள்ள தவறான பதில்களை அடித்து விட்டு புதிதாக தாங்கள் எப்படி எழுதுவது ? என்று கேள்வி எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் தேர்வு அறையை விட்டு வெளியே வந்து போராடிய தேர்வர்களிடம் காலதாமதத்துக்கு இணையான நேரம் கொடுக்கப்படும் என்றனர். பின்னர் அவர்களுக்கு வினாக்கள் நிரப்பபடாத புதிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தேர்வு நடை பெற்றது. பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு திட்டமிட்டு இந்த வினாத்தாள் குளறுபடி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதே தாமதமாக தேர்வெழுதியவர்களின் ஆதங்கமாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.