சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்கனவே, பகுப்பாய்வுக் கூடம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியின்போது, செயல்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், அதை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, கட்டிடத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி மூலதன நிதியின்கீழ் ரூ.37லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு […]
