
காதலருடன் டூர் சென்றுள்ள ஆயிஷா : வைரலாகும் ரொமான்ட்டிக் போட்டோஸ்
சின்னத்திரை நடிகை ஆயிஷா பிக்பாஸிலிருந்து வெளியேறிவுடன், காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது காதலரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். ஆயிஷாவின் காதலர் பெயர் யோகேஷ் என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் கேரளாவுக்கு டூர் சென்றுள்ள ஆயிஷா அங்கே வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களில் ஆயிஷா-யோகேஷ் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.