வட மாநிலத் தொழிலாளர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: வட மாநிலத் தொழிலாளர்களுக்கான உதவி எண்களை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கான உதவி எண்களை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இதன்படி, வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.


— Tamil Nadu Police (@tnpoliceoffl) March 3, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.