பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் ஆண் மாடல்கள் ! சீனாவில் வினோதம்!

சீனாவில் உள்ள ஆண்கள் இப்போது பெண்களுக்கான உள்ளாடை விளம்பரங்களில் மாடலிங் செய்கிறார்கள்.
பெண் மாடல்கள் உள்ளாடைகளை ஆன்லைனில் காட்சிப்படுத்த சீனா தடை விதித்துள்ளது. ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான நாட்டின் சட்டத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சீன லைவ்ஸ்ட்ரீம் ஃபேஷன் நிறுவனங்கள் உள்ளாடைகளை ஆன்லைனில் காட்சிப்படுத்த புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

சீன பேஷன் நிறுவனங்கள் ஆண் மாடல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இந்த ஆண் மாடல்கள் புஷ்-அப் ப்ராக்கள், ஸ்னக் கோர்செட்டுகள் மற்றும் லேஸ்-டிரிம் செய்யப்பட்ட நைட் கவுன்கள் உள்ளிட்ட பெண்களின் உள்ளாடைகளை அணிந்து கொண்டு விளம்பரங்களில் தோன்றுகின்றனர். சீனாவின் TikTok பதிப்பான Douyin செயலியில் ஆண் மாடல்கள் பெண் உள்ளாடைகளில் இருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

லைவ்ஸ்ட்ரீம் வணிகத்தின் உரிமையாளர், சூ, சமூக ஊடக இணையதளத்தில் பட்டு அங்கி அணிந்த ஆண் மாடலையும் அறிமுகப்படுத்தினார். “The light and luxurious boudoir of the wife and adults” என்று தலைப்பில் பதிவிட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நூதனமான முயற்சியை இன்னும் எவ்வளவு காலம் தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்பதும் சந்தேகமே. ஏனெனில் சீனா ஆண்களின் “பெண்மைத்தனமான” சித்தரிப்புகளை ஊடகங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இனி சர்வமும் AI மட்டுமே – எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ் பிளான்..!

ஆண் மாடல்களின் வீடியோ வைரலானதை அடுத்து, இணைய பயனர்கள் முடிவு குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டனர். “இது ஒரு பெண் மாடலாக இருந்தால், லைவ் ஸ்ட்ரீம் எப்போது வேண்டுமானாலும் தடைசெய்யப்படும். இது போல் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இதனால் பெண்களின் வேலையும் பறிக்கப்படுகிறது” என்று ஒரு பயனர் எழுதினார்.  வேறு ஒருவர் “ஆண்கள் உள்ளாடைகளை பெண்ணை விட நன்றாக அணிந்திருக்கிறான்” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்க | Adani: ஏறு முகத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு..!

மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவரா நீங்கள்? அப்போ இந்த செய்தியை உடனே படியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.