இன்ஸ்டாவில் அறிமுகமான நபருடன் கர்ப்பமான சிறுமி: யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த போது விபரீதம்..!

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 15 வயதான சிறுமி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டா மூலமாக அறிமுகமான ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அவ்வபோது அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து வீட்டில் தெரிவித்தால் பிரச்சனையாகி விடுமோ என்று பயந்து சிறுமி கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். மருத்துவமனைக்கு அடிக்கடி தனியாகச் சென்று செக்-அப்பும் செய்து வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் தான், மருத்துவமனைக்கு சென்றால் எல்லாம் வெளியே வந்து விடும் எனப் பயந்து அச்சிறுமி வீட்டிலேயே பிரசவிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக யூடியூப்பில், வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தொடர்பான வீடியோக்களை தேடி தேடி பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து சுய பிரசவத்துக்கு தயாராகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் 2ஆம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்படவே, வீட்டில் யாருக்கும் தெரியாமல் தனது அறைக் கதவை பூட்டிவிட்டு யூடியூப் வீடியோவில் சொல்லியபடி சுயமாக பிரசவம் பார்க்க தொடங்கியுள்ளார். பிரசவத்துக்குப் பின் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். குழந்தை பெற்றெடுத்ததையும் பெற்றோரிடம் இருந்து மறைக்க திட்டமிட்ட சிறுமி விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தனக்கு பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற சிறுமி, அக்குழந்தையின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துவிடார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய சிறுமியின் தாய், தனது மகளின் உடல்நிலை பலவீனமாக இருப்பதை பார்த்துவிட்டு அவரிடம் விசாரித்துள்ளார்.

அப்போதுதான் தனக்கு நேர்ந்த சம்பவத்தை எல்லாம் தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியில் உறைந்துபோன சிறுமியின் தாய், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். விரைந்து வந்த போலீசார் கொல்லப்பட்ட பச்சிளம் சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு கொலைக் குற்றம் தொடர்புடைய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான நபரையும் தேடி வருகிறோம் ன்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.