திலிப் கண்ணன்: தமிழ்நாடு பாஜகவில் அடுத்த விக்கெட்… காவு வாங்கிய வார் ரூம்!

தமிழ்நாடு பாஜகவில் (Tamil Nadu BJP) இருந்து முக்கியமான நபர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். நேற்று மாநில ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் (CTR Nirmal Kumar) வெளியேறிய நிலையில், இன்று மாநில ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணன் (Dilip Kannan BJP) வெளியேறியுள்ளார். வழக்கம் போல் இவரும் மாநிலத் தலைவர் அண்ணாமலை (K Annamalai) மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

வார் ரூம் அட்ராசிட்டிகள்

தனது ட்விட்டரில், இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று அண்ணாமலை கூறினார். இந்த 20 மாதத்தில் எத்தனை பேரை உருவாக்கினார் என்பது இறைவனுக்கே வெளிச்சம். மீடியா வெளிச்சம் ஒருவருக்கு கூட கிடைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்

இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்று வரை சீன் போட்டு வருகிறார். தன்னை நேர்மையானவர் எனக் கூறும் இவர், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார். டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு பெற்றிருந்த தமிழ்நாடு பாஜகவின் முகமாக இருந்த கே.டி.ராகவனை முதலில் காலி செய்தார். ஆனால் அவர் மீது எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை.

மோசமான வார்த்தைகள்

அடுத்து பேராசிரியர் சீனிவாசன், பொன்.பாலகணபதி, நைனார். மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் வைத்துக் கொண்டே கெட்ட வார்த்தையில் போலீஸ் தோரணையில் பேசுகிறார். இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் அதை தொண்டர்கள் தூக்கி கொண்டாடிப்பார்கள். இவர் வந்து தான் கிழிச்ச மாதிரி கம்பு சுத்துறாங்க.

எல்.முருகன் வேற லெவல்

பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார். அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வுகள் உண்டா?

இன்னும் எத்தனை பேர்?

சொந்த கட்சியில் இத்தனை ஆண்டுகள் உழைத்தவனை வேவு பார்ப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவது தான் இவரின் வேலைகள். நான் சொன்னது உண்மையா, இல்லையா என்பது உள்ளே இருக்கும் 90 சதவீத நிர்வாகிகளுக்கு தெரியும். இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டிகள் என்னைப் போல் எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

பாஜகவிற்கு குட்பை

இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு நூறு சதவீதம் உழைத்திருக்கிறேன். என்னை எப்படியும் திட்டி தீர்ப்பீர்கள். அதற்கு முன்னால் ஒரு சித்தாந்தவாதியே இப்படி போறானே. தவறு எங்கே நடக்கிறது ஒருமுறை யோசித்து பாருங்கள். கனத்த இதயத்துடன் விடை பெறுகிறேன் என்று திலிப் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.