திருவிழா பார்க்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் மாவ்லி பதார் என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது உறவுக்காரர் ஒருவருடன் வந்துள்ளார்.
தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, உணவருந்திவிட்டு இருவரும் இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் அவர்களை 7 பேர் கொண்ட கும்பல் தடுத்தி நிறுத்தி பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது.
அந்த பெண்ணோடு வந்த உறவுக்காரர் கண்டித்ததால் அந்த நபரை கும்பல் அடித்து துரத்தியது. பின்னர் அந்த பெண்ணை காட்டுப் பகுதிக்கு தூக்கிச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அந்த பெண் மயங்கிய நிலையில், அவரை அங்கேயே விட்டுவிட்டு கும்பல் தப்பிச்சென்றுள்ளது. பின்னர் மயக்கம் தெளிந்து அந்த பெண் வீட்டுக்கு திரும்பி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
newstm.in