‘உனக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் உயிரே’ – ஜாக்குலினுக்கு கிரிமினல் கடிதம்.!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களுருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடயே இடைத் த்ரகராக செயல்பட்டு வந்த இவர், ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் பிளவு உண்டானபோது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தார்.

அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து 16 சொகுசு கார்கள், 82 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த நிகழ்வு அரசியல்வாதிகளையே வாய் பிளக்க வைத்தது. அதைத் தொடர்ந்து சுகேஷ் சந்திரசேகர் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்துகொண்டே தொழிலதிபருக்கு பல ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதாக ரூபாய் 200 கோடி ஏமாற்றியதாகவும் அமலாக்கதுறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் பாலிவுட் நடிகைகளான நோரா ஃபதேஹி மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது. மேலும் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டிஸும் அனுப்பப்பட்டது. சன் டிவியின் ஓனர் என்றும் ஜெயலலிதாவின் சொந்தக்காரர் என்றும் கூறி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை ஏமாற்றிய சுகேஷ் சந்திரசேகர் விலையுயந்த பொருட்களை பரிசாக கொடுத்து ஆடம்பர விடுதிகளில் உல்லாசமாக இருந்து வந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் வரிசையில் பல நடிகைகளும், மாடலிங் பெண்களும் அடக்கம்.

இந்தநிலையில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு மட்டுமல்ல, ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது பதிப்பை வெளிப்படையாக வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தார். அவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வெறுப்பாளர்கள் மற்றும் அவரது வழக்கறிஞர் குழுவிற்கும் ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

5 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்ற தாய்; கருணை கொலை செய்யப்பட்டார்.!

ஜாக்குலினை ‘மிக அருமையான மனிதர்’ என்று அழைத்த சுகேஷ், அவரது வாழ்க்கையில் இருந்து மறைந்த வண்ணங்களை திரும்பக் கொண்டுவருவதாக இந்த வண்ணமயமான ஹோலி திருநாளில் உறுதியளித்தார். ‘உனக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார். உனது பழைய நட்சத்திர அந்தஸ்தை திரும்ப கொண்டுவருவது எனது பொறுப்பு. எனக்கு நீ எவ்வளவு முக்கியமானவள் என்பது உலகம் அறியும். கவலைப்படாமல் இரு, அனைத்தும் மாறும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.