உதகை: ஆளுநர் ஆர்.என்.ரவி 6 நாள் சுற்றுப்பயணமாக, இன்று (மார்ச் 7) உதகை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 9.20 மணிக்கு கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து காரில் மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக வந்து, உதகை அரசு தாவரவியல் பூங்காமேல் பகுதியிலுள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.
இந்த 6 நாட்களும், நீலகிரியில் உள்ளகல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இன்றுஅதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.
ஆளுநர் வருகையையொட்டி கோவை மற்றும் நீலகிரி மாவட்டஎல்லைகள், கோத்தகிரி சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்திஉள்ளனர்.