வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் ஊழியரை தாக்கிவிட்டு, அவசரக் கதவை திறக்க முயன்ற பயணியை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி யுனேடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமான தரையிறங்க 45 நிமிடங்களுக்கு முன், சில பயணிகள் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றுள்ளனர். இதையறிந்த விமானத்தின் ஊழியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விமானத்தின் ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார்.தொடர்ந்து, அந்த நபர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றுள்ளார். இதையடுத்து விமானத்தின் பயணித்த சக பயணிகள் உதவியுடன், ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.

போஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இவரை அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்த உள்ளனர். இந்த வழக்கு வரும் மார்ச் 9ம் தேதி விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அப்போது விமானத்தின் ஊழியரை தாக்கிவிட்டு, அவசர கதவை திறக்க முயன்றுள்ள, அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement