மோசடி வழக்கு: லாலுவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை| Land-For-Jobs Scam: CBI Questions Lalu Prasad Day After Landing At Wife Rabri Devi’s House

பாட்னா: கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீஹாரைச் சேர்ந்த சிலருக்கு, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று (மார்ச் 6) விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.