பாஜகவின் டார்கெட் 10; தமிழ்நாட்டில் புதிய அலுவலகங்கள் திறப்பு… ஜே.பி.நட்டா வியூகம்!

தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகின்றன. தாமரை மலர்ந்தே தீரும் என முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முழங்க பின்னர் வந்த தலைவர்கள், அதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கு பலனாக இரண்டு விஷயங்கள் அரங்கேறின. மாற்று கட்சிகளை சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பலர் பாஜகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு பாஜக

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 எம்.எல்.ஏக்களை பெற்றனர். தற்போது மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திராவிட கட்சிகளுக்கு எதிராக காரசார அரசியலை தமிழ்நாடு பாஜக முன்னெடுத்து வருகிறது. தினசரி ஏதாவது ஒரு விஷயத்தை ஹைலைட் செய்து ஊடகங்களில் தமிழ்நாடு பாஜக கவனம் ஈர்த்து விடுகிறது.

திமுக அமைச்சர்களின் ஊழல்

இதில் லேட்டஸ்ட் அப்டேட்டாக திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை புள்ளிவிவரங்களுடன் வெளியிடப் போவதாக கூறி அண்ணாமலை அதிர வைத்துள்ளார். இதற்கிடையில் 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகங்களும் களமிறக்கப் பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழ்நாட்டில் புதிதாக 10 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் இன்று (மார்ச் 10) திறந்து வைக்கப்படுகின்றன.

Tamil Nadu BJP Offices

ஜே.பி.நட்டா வருகை

இதையொட்டி பாஜக மாநிலத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். அங்கிருந்த படியே 10 மாவட்டங்களில் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த பட்டியலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, விழுப்புரம், தேனி, திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

பாஜக அலுவலகங்கள் திறப்பு

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டரில், புதிய மாவட்ட அலுவலகங்கள் திறப்பு விழாவில் தலைமை தாங்கி திறந்து வைக்க வருகை தந்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது, நாட்டிற்காக கடினமாக உழைக்கும் தமிழ்நாடு பாஜக தொண்டர்களுக்கு உங்களின் வருகை புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத் தலைமை அசைன்மென்ட்

அடுத்த ஓராண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு பாஜக பல்வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மாநிலத் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கிராமங்கள் தோறும் பாஜக கொடி கம்பங்கள் நட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் பாஜகவில் புதிய நபர்களை சேர்க்க வேண்டும்.

மக்களவை தேர்தல்

இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட தலைவர்கள் எடுக்க வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள், திராவிட கட்சிகளின் ஏமாற்று வேலைகள் உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் எடுத்து செல்ல ஐடி விங் தீவிரம் காட்ட வேண்டும். இப்படி பல்வேறு அசைன்மென்ட்களை அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 10 மாவட்ட பாஜக அலுவலகங்கள் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக தென்னிந்திய வாக்கு வங்கியை குறிவைத்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என பலர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.