கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை ஜெ.பி.நட்டா திறந்தார். அலுவலகத்தை திறந்த ஜெ.பி.நட்டா 75அடி உயரமுள்ள கம்பத்தில் பாஜக கொடியினை ஏற்றி வைத்தார். காணொலியில் தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் பாஜக தேசிய தலைவர் நட்டா திறந்தார். விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர்.