அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாநிலத் தலைவர் கே.எஸ்அழகிரி தலைமையில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது.
அதில் 13-ம் தேதி காலை 11 மணிக்கு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, உ.பலராமன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், எஸ்.சி. அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.