ஆம்ஸ்டர்டம் :நெதர்லாந்தில் வரலாற்று ஆய்வாளர் ஒருவர், 1,000 ஆண்டுகள் பழமையான தங்கப் புதையலை கண்டறிந்துள்ளதாக, அந்நாட்டு தேசிய தொல்பொருள் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின் ஹுக்வுட் பகுதியில், வரலாற்று ஆய்வாளர் லாரன்ஸ் ரூய்ஸ்டர், 27, கடந்த 2021ல் ஆய்வு மேற்கொண்டார்.’மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன் ஆய்வு செய்த இவருக்கு, பழமையான கலைப் பொருட்கள் கிடைத்தன; நான்கு தங்கப் பதக்கங்கள், இரண்டு தங்கக் காதணி, 39 வெள்ளி நாணயங்கள் என ஏராளமான பொருட்களை கண்டுபிடித்தார்.
இவற்றை, இங்குள்ள தேசிய தொல்பொருள் ஆய்வகத்திடம் லாரன்ஸ் அளித்த நிலையில், அதிகாரிகள் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.பரிசோதனையின் முடிவில், இக்கலைப் பொருட்களின் ஆயுட்காலம், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
தங்கப் புதையலை கண்டறிந்த வரலாற்று ஆய்வாளர் லாரன்ஸ் கூறுகையில், ”நான் 10 வயதில் இருந்தே ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். விலை மதிப்புமிக்க இப்புதையலை கண்டறிந்ததை, என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இதுபோல் நான் கண்டறிவேன் என எதிர்பார்க்கவில்லை,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement