வாஷிங்டன்:வரும் 2046ல் பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ கணித்துள்ளது.
சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் சிறுகோள் அல்லது விண்கல் என அழைக்கப்படுகின்றன.
சூரிய குடும்பத்துக்கு வெளியே பல விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை, அவற்றை பாதிக்கும் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன.
பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து விடும். அரிதாக சில பூமியை தாக்கும் வாய்ப்பு அமையும். இதுவரை 30 ஆயிரம் விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரும் 2046 பிப்., 14ம் தேதி, ‘2023 டி.டபிள்யு’ என்ற விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதாக நாசா கணித்துள்ளது. இது மணிக்கு 24.64 கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. இது, தன் சுற்றுப்பாதையை ஒரு முறை சுற்றி முடிக்க 271 நாட்கள் ஆகின்றன.
இந்த விண்கல், இந்திய பெருங்கடல் – பசிபிக் கடல், அமெரிக்காவின் மேற்கு – கிழக்கு கடற்கரை பகுதிகள் – லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் உள்ளிட்ட நகரம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் விழுவதற்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
புதிய விண்கல் என்பதால் அதன் சுற்றுப்பாதையை கணிக்க நீண்ட நாட்கள் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் இது பூமியை தாக்கும் வாய்ப்பு இல்லாமலும் போகலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement