சிறுபடகு, புலம்பெயர்வோர்… பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம்


பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் சிறுபடகுகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தொகையை பிரான்சுக்கு அளிக்க பிரிதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டுள்ளார்.

478 மில்லியன் பவுண்டுகள்

பாரிஸ் நகரில் இரு தலைவர்களும் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 478 மில்லியன் பவுண்டுகள் தொகையை பிரித்தானியா பிரான்சுக்கு வழங்கும்.

சிறுபடகு, புலம்பெயர்வோர்... பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம் | Small Boats Detention Centre Uk To Pay

@AFP

அத்துடன் சிறுபடகுகளின் பயணம் துவங்கும் கடற்பகுதிகளை கண்காணிக்கவும், அப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் 500 மேலதிக பொலிசாரை களமிறக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக பிரான்சில் புதிதாக தடுப்பு முகாம் ஒன்றும் உருவாக்கப்படும் என ஜனாதிபதி மேக்ரான் அறிவித்துள்ளார்.
இதனால் ஆட்கடத்தும் குழுக்களில் இருந்து அப்பாவி புலம்பெயர் மக்களை காப்பாற்ற முடியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சிறுபடகு, புலம்பெயர்வோர்... பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம் | Small Boats Detention Centre Uk To Pay

@reuters

பிரித்தானியா அரை பில்லியன் பவுண்டுகள் தொகையை வழங்க இருப்பதால், சட்டவிரோத புலம்பெயர்வோருக்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய, உயர் பயிற்சி பெற்ற மற்றும் நிரந்தர மொபைல் காவல் துறையை பிரான்ஸ் உருவாக்கும்.

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்

மட்டுமின்றி, சக்தி வாய்ந்த ட்ரோன் விமானங்கள், ஹெலிகொப்டர் உட்பட கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
வாரத்திற்கு 7 நாட்களும், நாளுக்கு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

சிறுபடகு, புலம்பெயர்வோர்... பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம் | Small Boats Detention Centre Uk To Pay

@reuters

இந்த அரை பில்லியன் பவுண்டுகள் தொகையில், 124 மில்லியன் பவுண்டுகள் 2023-24 காலகட்டத்திலும், 168 மில்லியன் பவுண்டுகள் 2024-25 காலகட்டத்திலும், 184 மில்லியன் 2025-26 காலகட்டத்திலும் அளிக்கப்படும்.

இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 3,000 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.