வந்துவிட்டது பிரியாணி ATM… அதுவும் சென்னையில் – இனி எப்போதும் சுட சுட சாப்பிடலாம்!

Biryani Vending Machine In Chennai: ஏடிஎம் இயந்திரம் என்றால் அது பணத்திற்கு மட்டும்தான் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆட்டோமேட்டிக்காக நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவற்றுதே அதன் பயன்பாடாகும். 

எனவே, ஏடிஎம் என்பது பணத்திற்கு அதிக பயன்படுத்தப்பட்டாலும், வெளிநாடுகளில் உணவு டெலிவரியில் கூட பயன்படுகிறது. சமீபத்தில், ஹைதராபாத்தில் தங்கத்தை கூட நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பெறும் வகையில் சேவை தொடங்கப்பட்டது. பணத்தை நீங்கள் வங்கியிலும் சென்று எடுத்துக்கொள்ளலாம், தங்கத்தை நீங்கள் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். 

இந்தியாவில் முதல் முறை 

ஆனால், அதற்கு நீங்கள் இயந்திரத்தை அணுகும்போது, நேரம் விரையம் இன்றி, சேவையை விரைவாக பெற முடியும். மேலும், ஒரே இடத்தில் பல சேவைகளை எளிதாகவும் பெற்றுக்கொள்ள முடியும். எனவேதான். ஏடிஎம் ஐடியா வெற்றிபெற்றது எனலாம். அந்த வகையில் தற்போது ஏடிஎம் இயந்திரம் போன்ற இயந்திரத்தின் மூலம் நீங்கள் பிரியாணியையே பெறுக்கொள்ள முடியும் என்ற சொன்னால் நம்ப முடிகிறதா, அதுவும் சென்னையில்.

ஆம், சென்னை கொளத்தூரில் இந்தியாவில் முதன்முறையாக வெளிநாடுகளில் இருப்பது போன்ற ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடையை திறந்து அசத்தியுள்ளது, பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி கடை. 

எப்படி உதவும்?

இங்கு அமைக்கப்பட்டுள்ள நான்கு ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலை திரையில் தெரியும். நீங்கள் கியூ-ஆர் கோர்ட்டில் ஸ்கேன் செய்தோ அல்லது ஏடிஎம் கார்டில் ஸ்வைப் செய்தாலோ கட்டணம் செலுத்திக்கொள்ளலாம். 

இதையடுத்து, 5 நிமிடத்தில் பிரியாணி பார்சல் வந்துவிடும். இதனை பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதுடன் பிரியாணி நன்றாகவும் சுவையாகவும் உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். 

உரிமையாளர் சொல்வது என்ன?

மேலும் இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் கூறும்போது,”இந்தியாவில் முதன்முறையாக ஆளில்லா தானியங்கி முறையில் பிரியாணி கடை திறந்தது தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இங்கு வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பல்வேறு விலை பட்டியல்களில் சுவையான சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் கைது
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.