சென்னை: திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடன்: போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது பிரதான சாலை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதி, ஆன்மீக சுற்றுலாவுக்காக வாரணாசி சென்றிருந்தனர். அதனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் பெங்களூரில் இருந்து வீட்டுக்கு வந்த தம்பதியின் மகன் சம்பவத்தன்று கதவை திறந்து வைத்து உறங்கியிருக்கிறார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன், பீரோவை திறந்து 49 ஆயிரம் பணத்தை திருடியிருக்கிறார்.

திருட்டு

பணத்தை திருடிய திருடன், அசதியில் வீட்டின் கட்டிலின் கீழே உறங்கிவிட்டார். அந்த திருடனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்திருக்கிறது. அதனால் திருடனும் குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார். குறட்டை சத்தத்தைக் கேட்டு கண்விழித்த தம்பதியின் மகன் கீழே பார்த்தபோது, ஒருவன் படுத்திருப்பது தெரியவந்தது. அதனால் அந்த அறையின் கதவை பூட்டிய அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அருகே உள்ள குடியிருப்புகளில் சோதனை நடத்தினர். அப்போது திருடன், மதுபோதை மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். உடனே அவனைக் கைதுசெய்த போலீஸார் போதை தெளிந்தப் பிறகு விசாரித்தனர். விசாரணையில் அவனின் பெயர் ஏழுமலை என்று திருவண்ணாலையைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.