
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கேஸ் மானியம் ரூ.300 வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும், சென்டாக் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின்கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், செவிலியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் இயந்திரங்கள் நிறுவப்படும், கடலுக்கு அடியில் உயிரியல் பூங்கா அமைக்கப்படும், மீனவ முதியோர்களின் உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தெருமின் விளக்குகளையும் ரூ.4.50 கோடி செலவில் எல்.இ.டி. விளக்குகளாக நடப்பு நிதியாண்டில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கேஸ் மானியம் ரூ.300 வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
newstm.in