வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: என்னை கடத்தி சென்று படுகொலை செய்ய பாக்., போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கைது என நாடகமாடுகின்றனர் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். லாகூரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் குவிந்துள்ளனர். ஆனால், இம்ரான் கான் கட்சி தொண்டர்கள், அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.
அங்கு, மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கண்ணீர்புகை குண்டுகள் வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தொண்டர்களை விரட்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த பகுதியில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கைது செய்ய நடவடிக்கை என்பது வெறும் நாடகம் என்பது தெளிவாக தெரிகிறது. என்னை கடத்தி சென்று படுகொலை செய்வதே அவர்களின் உண்மையான நோக்கம். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியவர்கள், தற்போது துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள்.
நேற்று, உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்து போட்டு அளித்த போதும், போலீசார் ஏற்க மறுக்கின்றனர். அவர்களின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இம்ரான் கான் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement