இன்றைய (15) தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள்,ஊழியர்கள் பணி பணி பகீஷ்கரிப்பில் பணி பகீஷ்கரிப்பில் ஈடுபட்டதினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை.
அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே இயங்குகிறது இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்
இதேவேளை பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் பாடசாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது
வங்கி ஊழியர்கள் பகிஷ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை
புகையிரத ஊழியர்கள் விடுமுறை இரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகிற அதேவேளை அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது