மதுரை வாடிப்பட்டி அருகில் அங்கன்வாடியில் அதிகாரி போல நடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் ஒரு பெண் நகையை பறித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாடிப்பட்டி அருகே அரசு அங்கன்வாடி மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே ஒரு பெண் தன்னை ஊட்டச்சத்து மைய அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே சென்று குழந்தைகளிடம் நலம் விசாரிப்பது போல, ஒரு குழந்தை அணிந்திருந்த 2 கிராம் தங்க தாயத்தை திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இந்த தினத்தில் ஈடுபட்டது சாப்டூர் பகுதியில் வசித்து வரும் காவியா என்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் காவியாவை கைது செய்து அவரிடம் இருந்த தங்க தாயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுபோல வேறு சில இடங்களிலும் அவர் தனது கைவரிசையை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.