‘ஜெயலலிதாவிற்கு நாங்களா வாரிசை ஏற்படுத்தி தர முடியும்.!’ – ஆர்எஸ் பாரதி சர்ச்சை.!

சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி. ‘‘இந்தி காரனுங்க எல்லாம் முட்டாளுங்க. மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். அதன் பின்னர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டு பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை.

இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய..காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது.

எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போன போதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலையில்லை. நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது’’ உள்ளிட்ட பல்வேறு கருத்துகளால் சர்ச்சை ஏற்படுத்திய ஆர்எஸ் பாரதி, தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் கூட்ரோட்டில் பேரூராட்சி கழக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தேவராஜ் ஏற்பாட்டில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நலத்திட்டங்களை வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ் பாரதி, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளைச் சேர்ந்த மகளிர்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் சேலையும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினர்.

பின்னர் ஆர்எஸ் பாரதி பேசும்போது, ‘‘அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர், ஜானகி மற்றும் ஜெயலலிதா இவர்களுக்கு வாரிசு இல்லை என்றால் நாங்களா ஏற்பாடு செய்ய முடியும்?. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அவல நிலை போல் எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி அமைந்தார் என்பது உங்களுக்கே தெரியும்.

கூவத்தூரில் ஒரு மாத காலமாக அனைத்து உறுப்பினர்களையும் அடைத்து வைத்து ஆட்சியைப் பிடித்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

போன்றவர்கள் இளைஞர்களின் மனதை கலைப்பதற்காகவே உள்ளனர். எனவே தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு நமது கட்சியின் வரலாறுகளை சொல்லி வளர்க்க வேண்டும்.

அடுத்து வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றி, மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும்’’ என அவர் கேட்டுக்கொண்டார். அதிமுக தலைவர்களுக்கு வாரிசு இல்லாதது குறித்து ஆர்எஸ் பாரதியின் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுகவினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.