புதுடில்லி : சிவிங்கி இன சிறுத்தைகளை, மீண்டும் பெருக்கும் நோக்கில், தென் ஆப்ரிக்க நாடான, நமீபியாவில் கொண்டு வரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தையில், ‛சியாயா’ என்ற பெண் சிறுத்தை, நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
இவற்றுக்கு பெயர் சூட்ட, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், பூபேந்தர் யாதவ் ‛குனோ குட்டிகளுக்கு பெயர் சூட்ட வேண்டிய நேரம் இது!’ என, சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விருப்பமுள்ளவர்கள் https://www.mygov.in/task/name-four-newly-born-cheetah-cubs-kuno/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, அவர்களின் போர்ட்டலை பதிவு செய்து, தாங்கள் சூட்ட விரும்பும் பெயர்களின், பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, ஏப்.,30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement