சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத்


டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத் | Delhi Capitals Gujarat Titans Won Match

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர்.
பிரித்வி ஷா(7), அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(4) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இருவரது விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தினார். இதையடுத்து வார்னருடன், சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் 37 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ரீலி ரோசவ் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து அபிஷேக் போரல் சர்ப்ராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார். இதில் அபிஷேக் போரெல் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத் | Delhi Capitals Gujarat Titans Won Match

இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்ப்ராஸ் கான் 30 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹக்கிம் கான் 8 ஓட்டங்களும், அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 36 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளும், ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடியில் சஹா 14 ஓட்டங்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து சுப்மன் கில் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் 5 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்ததாக சாய் சுதர்சனுடன், விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியின் ரன் ரேட்டை நிதானமாக உயர்த்தினர்.

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத் | Delhi Capitals Gujarat Titans Won Match

இந்த சூழலில் விஜய் சங்கர் 29 (23) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து இந்த ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

முடிவில் சாய் சுதர்சன் 62 (48) ஓட்டங்களும், டேவிட் மில்லர் 31 (16) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 18.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து

163 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக நாட்ஜ் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.