Ajith: அஜித் ரேஸில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான்… சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகர் அஜித் ரேஸில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அஜித்தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அஜித். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இன்று உச்ச நடிகர் என்ற அந்தஸ்த்தில் உள்ள அஜித் தமிழ் திரையுலகில் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார் அஜித்.
​ Poorna: நயன்தாராவ விடுங்க பூர்ணா குழந்தையோட பேர பாருங்க…​
ஏகே 62கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. Poonam Bajwa: பர்த்டே பேபி பூனம் பஜ்வாவின் ஹாட் க்ளிக்ஸ்!​
மே ஒன்றாம் தேதிஅஜித்தின் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்தின் தந்தை திடீரென மரணமடைந்தார். இதனால் அஜித் படத்தின் அறிவிப்பு மேலும் தள்ளிப் போயுள்ளது. இருப்பினும் அஜித் படம் குறித்த அறிவிப்பு வரும் மே ஒன்றாம் தேதியான அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.
​ Nayanthara: குல தெய்வ கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி… காரணம் இதானா?​
பயில்வான் ரங்கநாதன்இதனிடையே அஜித் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். அதாவது பொன்மகள் வந்தாள், இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் அகில் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ரேஸர்’ திரைப்படம் வரும் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.
​ Vijayakanth: விஜயகாந்த் நிலைகுலைந்து போக காரணம் இதுதான்… பகீர் கிளப்பிய பிரபல இயக்குநர்!​
அஜித்துக்கு ஸ்பான்சர் இல்லஇதனை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பயில்வான் ரங்கநாதன், அஜித் பைக் ரேஸில் இருந்து விலகியதற்கான காரணம் இதுதான் என ஒரு தகவலை கூறியுள்ளார். அதாவது அஜித் பைக் ரேஸராக இருக்கும் போது அவருக்கே ஸ்பான்ஸர் இல்லை. ஸ்பான்ஸர் பிடிக்க முடியாததால்தான் அவர் ரேஸில் இருந்து விலகிவிட்டார் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
​ த்ரிஷா போல சிம்ரனுக்கும் இந்த பெருமை உண்டு!​
ரசிகர்கள் கோபம்பைக் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். அஜித் ஒரு முறை ரேஸில் பங்கேற்ற போது பெரும் விபத்தில் சிக்கினார். இதற்காகன வெளிநாட்டில் அவர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டது. அந்த விபத்துக்கு பிறகுதான் அஜித் ரேஸில் பங்கேற்பதை கைவிட்டார் என தகவல் வெளியானது. இந்நிலையில் ஸ்பான்ஸர் கிடைக்காமல் அஜித் ரேஸில் இருந்து விலகினார் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது அஜித் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.
​ Silk Smitha: நம்பியாரை அவமானப்படுத்திய சில்க் ஸ்மிதா… பிரபலம் வெளியிட்ட தகவல்!​
Aijth Bayilvan Ranganathan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.