Jawaan: சொகுசு படகில் ஷாருக்கான் உடன் நயன்தாரா டூயட்.. இப்படி லீக் ஆகிடுச்சே.. அதிர்ச்சியில் அட்லீ!

மும்பை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் ஜவான் படத்தின் டூயட் பாடல் காட்சி இணையத்தில் கசிந்து விட்டது.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஏகப்பட்ட காட்சிகள் அவ்வப்போது வாரிசு படத்துக்கு நடந்ததை போலவே லீக் ஆகி வருகிறது.

மெட்டல் பெல்ட்டால் படையப்பா ரஜினி போல ஷாருக்கான் சண்டையிடும் காட்சிகள் கசிந்த நிலையில், தற்போது பாடல் காட்சி ஒன்று லீக் ஆகி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் அட்லீ நண்பன் படத்தில் விஜய்யுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அப்போதே சொன்ன தெறி கதையை ராஜா ராணி படத்தை இயக்கி முடித்த கையோடு இயக்கி ஹிட் கொடுத்தார்.

அட்லி உடனான பயணம் விஜய்க்கு பிடித்துப் போக தொடர்ந்து மெர்சல் படத்தில் இணைந்தனர். அந்த படமும் தாறுமாறு ஹிட் அடிக்க அதன் பின்னர் பிகிலும் வசூலில் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக ஷாருக்கானுக்காக பல ஆண்டுகள் காத்திருந்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ.

வயதான கெட்டப்பில் ஷாருக்கான்: இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு கெட்டப்பில் நடித்து வருகிறார் என்கிற ரகசியமும் சமீபத்தில் வயதான கெட்டப்பில் ஷாருக்கான் இருக்கும் காட்சிகள் லீக் ஆக தெரிந்து விட்டது. மேலும், மெட்டல் பெல்ட்டை கொண்டு எதிரிகளை ஷாருக்கான் பந்தாடும் செம ஆக்‌ஷன் காட்சி ஒன்றும் கசிந்து படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நயன்தாராவுடன் டூயட்: இந்நிலையில், தற்போது சொகுசு படகின் டாப்பில் நடிகை நயன்தாராவுடன் ஷாருக்கான் டூயட் பாடும் அட்டகாசமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் நிலையில், படகில் இருந்தபடி சிலர் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து டிரெண்டாகி வருகிறது.

Shah Rukh Khan and Nayantharas Jawaan song scene leaked in internet

சீதாராமம் எஃபெக்ட்: சமீபத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சீதாராமம் படத்திலும் இதே போன்று படகின் மேல் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் நடனம் ஆடுவார்கள். அந்த எஃபெக்ட் இந்த படத்திலும் எதிரொலிக்கிறதா என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஏற்கனவே ஷாருக்கானின் பழைய சூப்பர் ஹிட் படத்திலும் இதே போன்று கப்பலில் நடனம் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.